நெல்லையில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் கைது.!
நெல்லை மாவட்டத்தில் இருந்து தப்ப முயன்ற திமுக பிரமுகர் பிரபுவை தனிப்படை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை அடுத்த மூளிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் பாண்டியன். இவர் பாஜகவில் நெல்லை வடக்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக திமுக மாநகர துணை செயலாளர் மூளி குளம் பிரபு உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திமுக பிரமுகர் தலைமறைவான நிலையில் மற்ற 6 பேரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இருந்து தப்ப முயன்ற திமுக பிரமுகர் பிரபுவை தனிப்படை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.