திருப்பூர் தெற்கு மாவட்ட குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி ஆலோசனைக்கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வீரகாளி வெங்கடேஷ், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.