தி.மு.க. பேனரை கிழித்து வீடியோ வெளியிட்ட பா.ஜனதா நகர தலைவர் கைது

Update: 2023-07-24 19:58 GMT

தாரமங்கலம்:-

தாரமங்கலம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தாரமங்கலம் புறவழிச்சாலை அருகில் பா.ஜனதா ஊழல் மந்திரிகளை கைது செய்யக்கோரி கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பேனர்களும் கட்டப்பட்டு இருந்தன. இந்த பேனரை தாரமங்கலம் நகர பா.ஜனதா தலைவர் தாமரைக்கண்ணன் கிழித்து எறிந்துள்ளார். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமரைக்கண்ணனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்