2 முறை பிரதமர் வேட்பாளரை தமிழகம் இழந்ததற்கு காரணம் திமுக தான் - அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு
2 முறை பிரதமர் வேட்பாளரை தமிழகம் இழந்ததற்கு காரணம் திமுக தான் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குற்றச்சாட்டி உள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு விமானம் மூலம் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா சென்னை வந்தார். நேற்று இரவு முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து, சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற வரும் 2024-ம் மக்களவை தேர்தல் பிரதமர் வேட்பாளர் குறித்து தென்சென்னை தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-
தமிழகம் இருளில் உள்ளது என்பதை தமது வருகையின் போதான மின்சார துண்டிப்பு காட்டுகிறது. தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறிவிட்டுள்ளது தமிழகம் அதற்கு காரணம் திமுக தான்.
காமராஜர், மூப்பனார் ஆகிய இரண்டு பேர் பிரதமராவதை இழந்துள்ளோம்.இரு முறை பிரதமர்களை தவறவிட காரணம் திமுகதான். வரும் காலங்களில் ஒரு தமிழனை பிரதமராக்க உறுதி எடுப்போம்.
வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம். 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக மீண்டும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் ஏழை குடும்பத்தில் இருந்து முதல்வர், பிரதமர் வர வேண்டும்.
வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தின் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்காக வைத்து அனைத்து தொகுதியிலும் பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும்.மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடன் பாஜக நிர்வாகிகள் கொண்டு சேர்க்க வேண்டும் தமிழ்நாட்டில் இருந்து 2 பிரதமர்களை தவறவிட்டுள்ளோம்; வரும் காலங்களில் ஒரு தமிழனையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என்றார்.
தென்சென்னை தொகுதியில் எஞ்சியிருக்கும் 40% பூத் கமிட்டியை வேகமாக முடிக்க பாஜக நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.