மழை பெய்யும் மாவட்டங்களில் தி.மு.க. பொதுக்கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் - தி.மு.க அறிவுறுத்தல்

கனமழை பெய்யும் மாவட்டங்களில் தி.மு.க. பொதுக்கூட்டத்தை ஒத்திவைத்து நடத்திட வேண்டும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Update: 2022-11-03 05:54 GMT

சென்னை,

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

வருகிற 4-ந் தேதி ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் வருகிற 4-ந் தேதி அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களை கனமழை பெய்யும் மாவட்டங்களில் மட்டும் ஒத்திவைத்து நடத்திட வேண்டும்.

அவ்வாறு ஒத்திவைக்கப்படும் பொதுக்கூட்டங்களை தங்கள் மாவட்டத்தில் கனமழை பெய்யாத நாட்களில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட பேச்சாளர்களை தொடர்புகொண்டு அந்தந்த மாவட்டக் கழக செயலாளர்களே பொதுக்கூட்டம் நடைபெறும் நாள், தேதி மற்றும் இடங்களை அறிவித்து நடத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்