ஆவடியில் தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி,
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நாசர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி, மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா உள்பட மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.என்.ஹனிபா, மாநில அமைப்பு செயலாளர் ஷேக் அகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.