'தி.மு.க. இளைஞரணி பதவியை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்' - உதயநிதி ஸ்டாலின்

'தி.மு.க. இளைஞரணி பதவியை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்' என உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

Update: 2022-11-23 12:17 GMT

சென்னை,

தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் சென்னை முகாம் அலுவலகத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக தி.மு.க. இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து, உதயநிதி ஸ்டாலினிடம் சென்னையில் நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்து, உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "தி.மு.க. இளைஞரணி பதவியை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்" என்றார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், "இளைஞரணியை ஏறத்தாழ 40 ஆண்டுகள் வளர்த்தெடுத்து, வலுப்படுத்திய தி.மு.க. தலைவரிடம், செயலாளராக கட்சி பணியாற்ற மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையொட்டி நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றேன். திறன்மிகுந்த கட்சியின் இளைஞர்களை ஒருங்கிணைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். 


     

Tags:    

மேலும் செய்திகள்