திமுக பல அடக்குமுறைகளை சந்தித்துள்ளது, இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல - அமைச்சர் பொன்முடி
திமுக கடந்த காலங்களில் பல அடக்குமுறைகளை சந்தித்துள்ளது, அனைத்திலிருந்தும் மீண்டு வருவோம் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை,
ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்த பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
டெல்லி, கர்நாடகத்தை தொடர்ந்து தமிழகத்திலும் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.திமுக கடந்த காலங்களில் பல அடக்குமுறைகளை சந்தித்துள்ளது, அனைத்திலிருந்தும் மீண்டு வருவோம். இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல என்றார்.