'மக்கள் பிரச்சினைகளில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தவில்லை' - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-07-20 16:21 GMT

சென்னை,

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், அரசு துறைகளில் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அ.தி.மு.க. சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்கள் பிரச்சினைகளில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தவில்லை. கடந்த 2 ஆண்டு காலத்தில் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஊழல் செய்வது, எதிர்கட்சிகளை பழிவாங்குவது போன்ற ஜனநாயக விரோத செயல்களைத் தான் செய்து வருகிறார்கள்" என்று விமர்சித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்