திமுக அரசுதான் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது : அண்ணாமலை

திமுக அரசுதான் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது" என அண்ணாமலை தெரிவித்தார் .

Update: 2022-06-09 10:58 GMT

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.பாஜக சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் கலந்து கொண்டார் .

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது ;

தமிழ்நாட்டில் திமுக அரசுதான் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது. பாஜக கட்சியின் எண்ணம் எதிரட்சியாக வருவதல்ல .ஆளும்கட்சியாக வருவது தான் . நம்பர் 3 பார்ட்டியாக வருவதற்க்கு கட்சி நடத்தவில்லை ,நம்பர் 1 பார்ட்டியாக வருவதற்க்கு கட்சி நடத்துகிறோம் .இவ்வாறு அவர் கூறினார் 

Tags:    

மேலும் செய்திகள்