ஆமை வேகத்தில் திமுக அரசு செயல்படுகிறது - எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஆமை வேகத்தில் திமுக அரசு செயல்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2022-09-11 06:43 GMT

அவினாசி,

அவினாசியில் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அத்திக்கடவு-அவினாசி திட்டம் கிடப்பில் போட்டுள்ளது. ஆமை வேகத்தில் திமுக அரசு செயல்படுகிறது. விவசாயிகளுக்கான அரசாக அதிமுக அரசு இருந்தது.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. மின் கட்டணம், பால் விலை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான விலைகளை திமுக அரசு உயர்த்தி உள்ளது. மின்சார கட்டண உயர்வு மக்களுக்கும், சிறு குறு வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்