தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழியில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்பு

Update: 2023-06-02 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி தென்பாதியில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் முருகன், சசிகுமார், கலைச்செல்வி, முகமது இந்திரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் சீனிவாசன், சீர்காழி நகர கழக செயலாளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் ஆகியோர் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசினர். தொடர்ந்து கட்சியில் அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் அன்று ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் அன்பழகன், விஜயகுமார், திட்டை பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்