சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகர தி.மு.க. சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம், வடக்கு ரத வீதியில் நடந்தது. நகர செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், கே.எஸ்.எஸ்.மாரியப்பன், சுப்புத்தாய் பொருளாளர் லாசர், மாவட்ட பிரதிநிதிகள் டைட்டஸ் ஆதித்தன், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கவுசல்யா வெங்கடேஷ் வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கடற்கரை, பொன்முத்தையாபாண்டியன், பூசைபாண்டியன், சேர்மத்துரை, கிறிஸ்டோபர், பெரியதுரை, ராமச்சந்திரன், மதிமாரிமுத்து, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.