தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

ஜோலார்பேட்டையில் தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Update: 2022-09-17 17:19 GMT

ஜோலார்பேட்டையில் நகர தி.மு.க. சார்பில் பெரியாரின் 144-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன் தலைமை தாங்கி தந்தை பெரியார் சிலைக்கும், அதன் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார்.

விழாவில் அவைத்தலைவர் மகேந்திரன் வரவேற்றார். ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி, நகர மன்ற தலைவர் காவியா விக்டர், துணைத்தலைவர் இந்திரா பெரியார்தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், சம்பத், பொருளாளர் இனியன், வார்டு செயலாளர்கள் அறிவழகன், பார்த்தீபன், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்