தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி கூட்டம்

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி கூட்டம் நடந்தது.

Update: 2023-08-13 00:04 GMT

இட்டமொழி:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம், பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வெ.நம்பி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் தவசி மணிகண்டன் முன்னிலை வைத்தார்.

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் இஸ்ரவேல் பிரபாகரன், அனிதா பிரின்ஸ், சுதர்சன், பொன்ராஜ், பொன்செல்வன், அருள்ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்