தி.மு.க. நிர்வாகிகள் சாலை மறியல்

ஜமாபந்திக்கு தகவல் தெரிவிக்காததால் தி.மு.க. நிர்வாகிகள் சாலை மறியல்

Update: 2022-06-07 18:20 GMT

வாணாபுரம்

தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெற்றது. இதற்கு அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை கண்டித்து கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் வாணாபுரம் போலீஸ் நிலையம் அருகே 15-க்கும் மேற்பட்டவர்கள் காரை குறுக்கே நிறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்