தி.மு.க. செயற்குழு கூட்டம்

திண்டுக்கல்லில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-05-31 19:00 GMT

திண்டுக்கல் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதற்கு முன்னாள் அவைத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, அனைத்து ஊராட்சிகளிலும் கட்சிக் கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் தெருமுனை பிரசாரம் செய்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கதிரேசன், ஒன்றிய துணைச் செயலாளர் காளிதாஸ், ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜா, முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் சுந்தரராஜன், ரகுமான், நாகராஜ், மயில்சாமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் பொன்ராமன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்