தி.மு.க. செயற்குழு கூட்டம்

தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

Update: 2023-05-20 18:45 GMT

காரைக்குடி

சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும் தமிழக கூட்டுறவு துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்ட கழக செயற்குழு கூட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் பசும்பொன் மாவட்ட அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் அ.கணேசன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வருகிற 25-ந்தேதி இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை குறித்து, உறுப்பினர் சேர்க்கை மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே மாவட்ட கழக நிர்வாகிகள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்