விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.

Update: 2023-03-28 18:45 GMT

திண்டிவனம், 

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகர் தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர்கள் (திண்டிவனம்) வக்கீல் சிவ.ஜெயராஜ், (மயிலம்) வக்கீல் பூவை சி.ஜெரால்டு, (செஞ்சி) அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் மாசிலாமணி, வக்கீல் சேதுநாதன், சீத்தாபதி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கி பேசினார். கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல், முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து திண்டிவனம், செஞ்சி, மயிலம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக மறைந்த ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, தொ.மு.ச. நிர்வாகி கீழ் எடையாளம் குப்புசாமி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதில் வக்கீல் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் ரமணன், நிர்வாகிகள் ரவிக்குமார், செஞ்சி சிவா, திண்டிவனம் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஒலக்கூர் சொக்கலிங்கம், ராஜாராம், மரக்காணம் தயாளன், பழனி, மயிலம் மணிமாறன் உள்ளிட்ட வடக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்