தி.மு.க. செயற்குழு கூட்டம்
வாணியம்பாடியில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடியில் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி தேர்தலில் வெற்றி பெற்று கட்சி தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில், தொகுதி ஒன்றுக்கு 50 ஆயிரம் பேர் என 2 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். கருணாநிதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், வாணியம்பாடி நகர செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார், ஆம்பூர் நகர செயலாளர் ஆறுமுகம், திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன், பேரூர் செயலாளர் ஆ.செல்வராஜ், ஸ்ரீதர் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய மற்றும் பேரூர் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.