கள்ளக்குறிச்சியில்தி.மு.க. தேர்தல் பணி அலுவலகம்அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
கள்ளக்குறிச்சியில் தி.மு.க. தேர்தல் பணி அலுவலகத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சியில் தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் (தெற்கு) வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ( வடக்கு) உதயசூரியன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட அவைத் தலைவர் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவரும், மாவட்ட துணை செயலாளருமான புவனேஸ்வரி பெருமாள் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு, தேர்தல் பணி அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகளை சிறப்பாக பணியாற்றி வெற்றிகளை பெற வேண்டும். அதற்கான பணிகளை தற்பொழுதே தொடங்க வேண்டும் என்றாா். காலை உணவு திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எத்திராசு, எஸ்.என்.டி.முருகன். ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், கே.கே. அண்ணாதுரை, வெங்கடாசலம், எம்.ஆர் என்கிற எம். ராஜேந்திரன், சத்தியமூர்த்தி, அன்பு, மணிமாறன், அசோக்குமார், நகரச் செயலாளர் சுப்புராயலு, ஜெய்கணேஷ் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.