தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-07-24 20:00 GMT

தேனி மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை கண்டித்தும், அங்கு நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த அந்த மாநில பா.ஜ.க. அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் பவானி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட தலைவி மாலா, துணைத்தலைவி ஜெரினாபேகம், துணை அமைப்பாளர்கள் அழகுமணி, ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், அந்த மாநில முதல்-மந்திரி பதவி விலக வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில், தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ராஜசேகர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்