தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

Update: 2023-07-24 18:45 GMT

நாகர்கோவில்:

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தை கண்டித்தும், அங்கு நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மாநில, மத்திய அரசை கண்டித்தும் குமரி மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் நேற்று காலையில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஹெலன் டேவிட்சன் தலைமை தாங்கினார்.

தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மாநகர மகளிர் அமைப்பாளர் அம்மு ஆன்றோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மேயர் மகேஷ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து வருகிறது. பா.ஜனதா ஆளும் மணிப்பூரில் பெண்களுக்கு பல கொடுமைகள் நடந்து வருகிறது. மணிப்பூரில் நடந்து வரும் இரு சமூகத்தினர் இடையேயான கலவரத்தை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது. நாட்டில் சர்வதிகார ஆட்சியை பா.ஜனதா செய்து வருகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் கூட பா.ஜனதாவை வெறுக்கிறார்கள் என்பது தான் உண்மை என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநில நிர்வாகிகள் தில்லை செல்வம், நசரேத் பசலியான், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், ஒன்றிய செயலாளர்கள் பாபு, மதியழகன், பிராங்கிளின், செல்வம், லிவிங்ஸ்டன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர், மகளிர் அணி நிர்வாகிகள் ஜனஸ் மைக்கேல், மேரி ஜெனட்விஜிலா, ஜெசிந்தா, கரோலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற பெண்கள் சிலர் தங்களது கண்களை கருப்பு துணியால் கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்