தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மாதந்தோறும் வெளியிடப்படும் -அண்ணாமலை பேட்டி

தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மாதந்தோறும் வெளியிடப்படும் அண்ணாமலை பேட்டி.

Update: 2022-06-13 18:44 GMT

கோவை,

கோவை பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் மின்துறை குறித்து பொய்யான தகவலை கூறுவதாக சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார்.

மாதந்தோறும் தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். நியூட்ரிசியன் கிட் டெண்டர் ஏன் இதுவரை திறக்கப்படவில்லை.

போலீஸ் நிலையங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்தது குறித்து முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழக அரசில் துறை செயலாளர்களை மாற்றுவதால் எந்த பலனும் இல்லை. அமைச்சர்களை மாற்றினால் ஏதாவது பலன் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்