நெய்வேலி சட்டமன்ற தொகுதிதி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்அமைச்சர் சி.வி.கணேசன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

நெய்வேலி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-10-15 18:45 GMT

நெய்வேலி, 

கடலூர் மேற்கு மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நெய்வேலி வட்டம் 25 பகுதியில் உள்ள தொ.மு.ச. அலுவலகத்தில் நடந்தது. இதற்கு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் சி.வி.கணேசன், நெய்வேலி தொகுதி பொறுப்பாளர் சுபா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர்கள் சரியாக உள்ளதா? விடுபட்டுள்ளதா? என்பதை சரிபார்ப்பதுடன், பெயர்கள் விடுபட்டிருந்தால் அதனை உடனடியாக பட்டியலில் சேர்க்க வேண்டும். புதிய வாக்காளர்களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும். மக்களுக்கு தி.மு.க. அரசு செய்த நலத்திட்டங்களை தெரிவித்து உரிமையாக வாக்கு கேட்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறவேண்டும். மேலும் 2026-ம் ஆண்டு் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வர தி.மு.க.வை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராச வன்னியன், மாவட்ட பொருளாளர் தண்டபாணி, தொ.மு.ச. பொதுச் செயலாளர் பாரி, பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, நெய்வேலி நகர அவை தலைவர் நன்மாற பாண்டியன், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்முடி, நகர பொருளாளர் மதியழகன், துணை செயலாளர் கருப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜேஷ், சதாம் மற்றும் நெய்வேலி நகர கிளைக் கழக செயலாளர்கள், தொ.மு.ச. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்