மர்ம காய்ச்சலால் இறந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தி.மு.க.வினர் ஆறுதல்
மர்ம காய்ச்சலால் இறந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தி.மு.க.வினர் ஆறுதல் கூறினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் யூனியன் புதுப்பட்டி ஊராட்சி காசிநாதபுரம் பகுதியில் சமீபத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சொரிமுத்து மகள் பூமிகா (வயது 6), பழனி மகள் சுப்ரியா (8) ஆகிய 2 பேரும் இறந்தனர். இதையடுத்து தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கட்சி நிர்வாகிகளுடன் காசிநாதபுரத்துக்கு சென்று, உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தலா ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
தொடர்ந்து அப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகராம், புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால் விநாயகம், மருதம்புத்தூர் ஊராட்சித் தலைவர் பூசைத்துரை மற்றும் பலர் உடன் இருந்தனர்.