அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து சாலையில் படுத்த தி.மு.க. பிரமுகரால் பரபரப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து சாலையில் படுத்த தி.மு.க. பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அம்பாப்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவர் தி.மு.க. கிளைக்கழக செயலாளராக உள்ளார். நேற்று மாலை விக்கிரமங்கலத்திற்கு வந்த நெடுஞ்செழியன் விக்கிரமங்கலம் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் சாலையில் திடீரென படுத்துக்கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினார். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து நெடுஞ்செழியன் தானாக எழுந்து அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.