ஆவின் பால் தட்டுப்பாட்டை கண்டித்து தே.மு.தி.க. போராட்டம்
அறந்தாங்கியில் ஆவின் பால் தட்டுப்பாட்டை கண்டித்து தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆவின்பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆவின் பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பால் தட்டுப்பாட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கியில் தெற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆவின் பால் தட்டுப்பாட்டுக்கு எதிராகவும் அதனை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.