இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தி திணிப்பை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூரில் தாலுகா அலுவலகம் எதிரில் தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் வி.வடிவேலு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை அமைப்பாளர் தசரதன் வரவேற்றார். கிரிராஜ், சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, நல்லதம்பி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினர்.
ஆர்பாட்டத்தில் மாநில உரிமையை பறிக்கின்ற மத்திய அரசின் திட்டங்களை இந்த மண்ணில் அனுமதிக்கமாட்டோம். அலுவலக மொழியான ஆங்கிலத்தை அழிக்காதே, மத்திய அரசு நடத்தும் பள்ளி, கல்லுரி, உயர் கல்வி நிறுவனத்தில் இந்தியை திணிக்காதே, அனைவருக்கும் ஒரே நுழைவுத்தேர்வு என்பதை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஆவின் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகுமார், நகர செயலாளர்கள் எம்.ஆர்.ஆறுமுகம், சாரதிகுமார், அன்பு, ஒன்றிய செயலாளர்கள் கே.ஏ.குணசேகரன், முருகேசன், சதீஷ்குமார் மாவட்ட விவசாய அணி, தொழிலாளர் அணி அமைப்பாளர் பழனி, மற்றும், நகர, பேரூராட்சி, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்