நடிகை குஷ்பு மீது போலீசில் தி.மு.க.வினர் புகார்
சமூகவலைதளத்தில் பெண்கள் குறித்து அவதூறு பதிவிட்டதாக நடிகை குஷ்பு மீது நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.
சமூகவலைதளத்தில் பெண்கள் குறித்து அவதூறு பதிவிட்டதாக நடிகை குஷ்பு மீது நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.
தி.மு.க. புகார்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலையில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியை சேர்ந்த வக்கீல் ராஜூ தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் வந்தனர்.
அவர்கள் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.
நடிகை குஷ்பு
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
நான் எனது டுவிட்டர் கணக்கை உபயோகித்துக்கொண்டு இருந்தேன். அப்போது, அதில் நடிகை குஷ்பு அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பெண்களை இழிவாக விமர்சித்துள்ளார். இதனை பார்த்து என் வீட்டு பெண்கள் தாங்க முடியாத மனவேதனையும், அவமானமும் அடைந்தனர்.
எனவே, சமூகவலைதளத்தில் பெண்கள் குறித்து அவதூறு பதிவிட்டதாக நடிகை குஷ்பு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.