தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திசையன்விளை பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்

Update: 2022-09-27 22:24 GMT

திசையன்விளை:

திசையன்விளை பேரூராட்சி சாதாரண கூட்டம் அதன் தலைவர் ஜான்சிராணி தலைமையில், செயல் அலுவலர் ஞானசுந்தர், துணைத்தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 8 பேரும், அ.தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் 6 பேரும் கலந்து கொண்டனர்.

இதில், 24 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தி நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அதற்கு அ.தி.மு.க. கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தீர்மான புத்தகத்தை எடுத்து சென்று விட்டதாக, தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் செயல் அலுவலரிடம் புகார் கொடுத்தனர். தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை போலீசார் தீர்மான புத்தகத்தை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். நேற்று தீர்மான புத்தகம் பேரூராட்சியில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்