வாழப்பாடியில் தி.மு.க.வினர் மோதல்வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது

வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பாக தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த தி.மு.க.வினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-27 20:21 GMT

வாழப்பாடி

வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பாக தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த தி.மு.க.வினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க.வினர் மோதல்

வாழப்பாடியில் புதிதாக நிறுவப்பட்ட சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகமான ஸ்டாலின் அறிவாலயத்துக்கு அமைச்சர் ேக.என். நேரு நேற்று வந்து கட்சி தொண்டர்களுடன் உரையாடினார்.

அப்போது சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற உதவகோரி அமைச்சர் நேருவிடம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மனு அளித்தனர். அமைச்சர் நேருவும் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினாராம்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு புறப்பட்ட உடன் தம்மம்பட்டி பேரூராட்சி தலைவர் கவிதா மற்றும் 12-வது வார்டு கவுன்சிலர் காவ்யாவிற்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிகொணடதால் அந்த இடத்தில திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகராறில் கவுன்சிலர் காவ்யாவின் கணவர் சேகர் காயமடைந்தார்.

பின்பு அங்கிருந்த தி.மு.க. தொண்டர்கள் சமாதானம் செய்து அனைவரையும் தம்மம்பட்டிக்கு அனுப்பி வைத்தனர். தம்மம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேகருக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டது.

பரபரப்பு

இது குறித்து தம்மம்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூறும் போது, 'பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்ற உதவகோரி அமைச்சர் நேருவிடம் நேற்று மனு அளித்தோம். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கவுன்சிலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். விரைவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்' என்றார்கள்.

இந்த நிலையில் அறிவாலயம் முன்பாக தி.மு.க. கவுன்சிலர்கள், தி.மு.க. தொண்டர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்