குத்தாலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் எம்.என். ரவி முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் விஜய் அறிவழகன் வரவேற்றார். குத்தாலம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை, ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகம், தி.மு.க. நிகழ்வுகளில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகனுக்கு சிறப்பான வரவேற்பு வழங்குவது குறித்து பேசினார். கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் ஜெயசுதா, எம்.ஆர்.என். ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் திவ்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.