தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

கீழப்பாவூரில் தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-05-03 18:45 GMT

பாவூர்சத்திரம்:

தென்காசி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட கீழப்பாவூர் மேற்கு ஒனறிய தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய பார்வையாளர்களாள மாவட்ட பொருளாளர் எம்.ஏ.எம்.ஷெரீப், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், தொண்டரணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன், மாவட்ட துணை செயலாளர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய செயலாளர் க.சீனித்துரை வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.அருள் தீர்மானங்களை வாசித்தார். தொகுதி பார்வையாளரும், துணை அமைப்புச்செயலாளருமான எஸ்.ஆஸ்டின், மாவட்டச் செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை, கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

கூட்டத்தில் கீழப்பாவூர் யூனியன் தலைவர் காவேரி, கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய கவுன்சிலர்கள் வளன்ராஜா, தர்மராஜ், நான்சிடோமினிக், ராஜேஸ்வரி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கணேஷ், பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் விஜயன், கபில்தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திப்பணம்பட்டி-அரியப்பபுரம் யூனியன் சாலையை, மாநில நெடுஞ்சாலையாக மாற்றி அமைத்து, ரூ.4.42 கோடி நிதி பெற்றுத்தந்து சாலை பணியை தொடங்கி வைத்த தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனுக்கு நன்றி தெரிவிப்பது, ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் நிறைவேற்ற வனத்துறை அனுமதி பெற உழைத்து வருவதுடன், திட்டத்தை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுத்தல், திருவாரூரில் ஜூன் 4-ந் தேதி நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் சார்பில் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பிரதிநிதி சமுத்திரபாண்டி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்