தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
குத்தாலத்தில் தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
குத்தாலம்:
குத்தாலம் தி.மு.க. அலுவலகத்தில் குத்தாலம் வடக்கு ஒன்றியம் மற்றும் குத்தாலம் பேரூர் தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் குத்தாலம் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் வரவேற்றார். இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா கலந்து கொண்டு பேசினார். பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி படிவங்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், வடக்கு ஒன்றிய அவை தலைவர் செல்லக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குத்தாலம் பேரூர் செயலாளர் சம்சுதீன் நன்றி கூறினார்.