தி.மு.க. பூத்கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. பூத்கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

Update: 2023-04-26 18:45 GMT

திருவெண்காடு:

திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பூத்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர்கள் உத்திர மூர்த்தி, சுதாகர், மாவட்ட பிரதிநிதிகள் கோபி, கணேசன், பொருளாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. மற்றும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து கழக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை விளக்கிக் கூற வேண்டும். வருகிற ஜூன் 3-ந் தேதி முன்னாள் முதல் -அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், மகளிர் அணியை சேர்ந்த மணிமேகலை, ராணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்