தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதாவினர் பிச்சை எடுக்கும் போராட்டம்

தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதாவினர் பிச்சை எடுக்கும் போராட்டம்

Update: 2023-09-06 19:45 GMT

ஊட்டி

மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்கு ஒதுக்கிய நிதியில் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசு முறைகேடு செய்துள்ளதாக கூறி பா.ஜனதாவினர் நேற்று ஊட்டி ஏ.டி.சி பஸ் நிலையத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பட்டியல் இனப்பிரிவு மாநில பொது செயலாளர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பட்டியலின மக்களின் கல்வி மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு நிதி அனுப்புகிறது. அந்த நிதியை திமுக அரசு மகளிர் உதவித்தொகை திட்டத்திற்கு மாற்றுகிறது. இதனால் பட்டியல் இன மக்கள் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் தொடர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும், அதேபோல் திமுக அரசிடம் நிதி இல்லை என்பதால் நாங்கள் பொது மக்களிடம் பிச்சை எடுத்து அந்த நிதியை அரசுக்கு அனுப்புகிறோம். என்றனர்.

இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் மோகன்ராஜ், பட்டியலின மாவட்ட தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்