தி.மு.க. ஆலோசனை கூட்டம்

மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-05-05 19:36 GMT

திருமங்கலம், 

தி.மு.க. தெற்கு மாவட்ட கழகம் சார்பாக மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆலோசனை பேரில் மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நகர் கழகத்தின் சார்பில் நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான், அவைத் தலைவர் அப்துல் கலாம் ஆசாத், திருமங்கலம் நகர் கழக துணைச் செயலாளர் செல்வம், கவுன்சிலர்கள் வீரகுமார் திருக்குமார், சின்னச்சாமி, சாலிகா உல்பத் ஜெய்லானி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவை வரவேற்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஒவ்வொரு வார்டு வீதம் உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. வார்டுகளில் உள்ள பொறுப்பாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கட்சித்தொண்டர்கள் கலந்து கொள்வது குறித்து என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்