வருமுன் காப்போம் முகாமில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் தனித்தனியாக பங்கேற்பு
5புத்தூர் ஊராட்சியில் நடந்த வருமுன் காப்போம் மருத்துவமுகாமில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் தனித்தனியாக பங்கேற்றனர்.
கண்ணமங்கலம்
5புத்தூர் ஊராட்சியில் நடந்த வருமுன் காப்போம் மருத்துவமுகாமில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் தனித்தனியாக பங்கேற்றனர்.
கண்ணமங்கலம் அருகே உள்ள 5 புத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை தச்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேஷ்பிரகாஷ் தலைமையில், மேற்கு ஒன்றிய குழு தலைவர் பச்சியம்மாள் சீனிவாசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, முகாமினை பார்வையிட்டார்.
ஆரணி நகர மன்ற ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர்கள் எஸ். மோகன், துரைமாமது உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் தேவமணி ஜம்பு வரவேற்று பேசினார்.
முகாமில் ஒண்ணுபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரேவதி, மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆய்வக நிபுணர்கள் கலந்து கொண்டு 915 பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இதில் 43 பேருக்கு பல் பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் இ.சி.ஜி. பரிசோதனை 14 பேருக்கும், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை 26 பேருக்கும், கண்புரை அறுவை சிகிச்சைக்காக 5 பேர் பரிந்துரை செய்யப்பட்டது.
என வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேஷ்பிரகாஷ் தெரிவித்தார்.
இந்த முகாமினை தி.மு.க.வினர் சென்றபின், அ.தி.மு.க.வைச்சேர்ந்த ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன் வருகைதந்து முகாமினை பார்வையிட்டு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
அவருடன் கண்ணமங்கலம் நகர செயலாளர் பாண்டியன் பாளைய ஏகாம்பர நல்லூர் துணை தலைவர் சேகர், 5 புத்தூர் துணை தலைவர் மகாலட்சுமி வடிவேலு, ஊராட்சி செயலர் சுரேஷ் உள்பட பலர் வந்திருந்தனர்.
முடிவில் சுகாதார ஆய்வாளர் ஆர்.வினோத்குமார் நன்றி கூறினார்.