கோவில் நிலத்தை ஏலம் எடுப்பதில் தி.மு.க.-அ.தி.மு.க. பிரமுகர் இடையே வாக்குவாதம்

திருப்பத்தூர் அருகே கோவில் நிலத்தை ஏலம் எடுப்பதில் தி.மு.க.-அ.தி.மு.க. பிரமுகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

Update: 2022-06-09 16:25 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கோவில் நிலத்தை ஏலம் எடுப்பதில் தி.மு.க.-அ.தி.மு.க. பிரமுகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

கோவில் நிலம்

திருப்பத்தூர் தாலுகா பேராம்பட்டு கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 200 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கான குத்தகை காலம் முடிவடைந்து விட்டது.

இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பேராம்பட்டு, சிம்மணபுதூர், ஆண்டியூர், பள்ளத்தூர், மட்றப்பள்ளி, ஆகிய இடங்களில் உள்ள 60 ஏக்கர் நிலம் மட்டும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.அன்பழகன் தலைமையில் செயல் அலுவலர் அண்ணாமலை முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.மட்றப்பள்ளி கிராமத்தில் உள்ள நிலத்திற்கான ஏலம் தொடங்கிய போது அ.தி.மு.க. பிரமுகர் சாமிநாதனுக்கும், தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே‌.தணிகாசலத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

அடிக்க பாய்ந்தனர்

கடந்த முறை ரூ.18 ஆயிரத்துக்கு ஏலம் போன நிலம் இந்த முறை ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் வரை ஏலம் கேட்கப்பட்டு தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது சாமிநாதனின் மகன் அன்பு மற்றும் ராஜாமணி ஆகியோர் தணிகாசலத்திடம் ஏலத்தை இனிமேல் கேட்காேத எனக் கூறியுள்ளார்கள். ஆனால் அவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் போது இருபிரிவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தணிகாசலத்தை‌ அடிக்க பாய்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக கூட்டுறவு சங்க தலைவர் குலோத்துங்கன் மற்றும் தி.மு.க.வினர் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். அதற்குள் இரு பிரிவினரும் வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உடனடியாக தி.மு.க.வினர், ஏலம் எடுத்த சாமிநாதனை பணம் கட்ட கூறியுள்ளனர். அவர் பணத்தை இன்று கட்டுவதாக கூறியதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

60 ஏக்கர் நிலம் ரூ.4 லட்சத்திற்கு மட்டுமே ஏலம் போனது. கோவிலுக்கு சொந்தமான நிலம் 200 ஏக்கர் இருந்தும் கோவில் சிதிலமடைந்து பாழடைந்த நிலையில் உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்