தி.மு.க நிர்வாகியை அரிவாளால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி அம்பத்தூர் கோர்ட்டில் சரண்

தி.மு.க நிர்வாகியை அரிவாளால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைத்தனர்.

Update: 2023-05-11 10:11 GMT

திருவள்ளூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 32). திருவள்ளூர் தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார். கடந்த 4-ந்தேதி இவர் தனது மருந்து கடையில் இருக்கும்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் கலைவாணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். அக்கம்பக்கத்தினர் கலைவாணனை மீட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைவாணனை வெட்டிய நபர்களை தேடி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் தொடர்புடைய ஆகாஷ் (21), சந்துரு என்ற சந்திரசேகர் (36), சந்தோஷ் (22), 18 வயதுடைய சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆகாஷ், சந்துரு, சந்தோஷ் ஆகிய 3 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார். 18 வயது சிறுவனை இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை கெல்லீசில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருவள்ளூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த பிராங்கிளின் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அம்பத்தூர் கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து நீதிபதி உத்தரவின் பேரில் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்