தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
வேளாங்கண்ணி அருகே தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் வேளாங்கண்ணி பேரூர் சார்பாக திருப்பூண்டியில் தி.மு.க.செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நாகை மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமை தாங்கினார். கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் முன்னிலை வகித்தார். இதில் கீழ்வேளூர் தொகுதி பொறுப்பாளரும் மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளருமான கே.ஆர்.என்.போஸ் பேசினார். கீழையூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணை செயலாளர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் சார்லஸ், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.