தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்
அழகியபாண்டியபுரத்தில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
பேட்டை:
அழகியபாண்டியபுரத்தில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் நெல்லை முத்தையா கலந்து கொண்டு அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.
இதில் மானூர் ஒன்றிய சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன், மாவட்ட பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.