ஆர்.எஸ்.மங்கலம்
ஆர் எஸ் மங்கலம் யூனியன் சனவேலியில் ஆர்.எஸ். மங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆர்.எஸ். மங்கலம் தி.மு.க. வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசுப்பிரமணியன் என்ற கண்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் டாக்டர் வெற்றிவேல் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். இதில் ஆர்.எஸ். மங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மோகன், ஆர்.எஸ். மங்கலம் பேரூர் கழகச் செயலாளர் கண்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் பகத்சிங் நல்ல சேதுபதி, ஆர்.எஸ். மங்கலம் யூனியன் தலைவர் ராதிகா பிரபு, யூனியன் துணைத் தலைவர் சேகர், பணிக்கோட்டை மாரிமுத்தன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடாஜலபதி ஹாப்பி ராய் சுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர் மேழிச்செல்வம், கவ்வூர் மகாதேவன் மற்றும் தி.மு.க. வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.