தி.மு.க. சாதனை விளக்க கூட்டம்
வள்ளியூரில் தி.மு.க. சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் பழவூரில் நடைபெற்றது. வள்ளியூர் யூனியன் தலைவரும், தெற்கு ஒன்றிய செயலாளருமான சேவியர் செல்வராஜா தலைமை தாங்கினார்.
தலைமை கழக பேச்சாளர் நெல்லை மணி சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.