தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு
தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு
மலுமிச்சம்பட்டி
மலுமிச்சம்பட்டி ஊராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர், மகன் ஆகியோரையும் முகமூடி கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெண் கவுன்சிலர்
கோவை அருகே மலுமிச்சம்பட்டி அவ்வையார் நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 47). இவருைடய மனைவி சித்ரா (44). தி.மு.க.வை சேர்ந்த இவர் மலுமிச்சம்பட்டி ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். இவருக்கு மோகன் (24) என்ற மகன் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வீட்டில் சித்ரா, அவரு டைய கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோர் இருந்தனர். அவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக தயாராகிக் கொண்டு இருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்தபடி வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டுக்குள் திபுதிபுவென்று புகுந்தனர். அவர்களை பார்த்த தும் சித்ராவும், அவரது கணவரும் சத்தம் போட்டு யார் நீங்கள்?, எதற்காக வீட்டுக்குள் வருகிறீர்கள்? என கேட்டு உள்ளனர்.
அரிவாள் வெட்டு
ஆனால் அதற்குள் ஆவேசமாக வந்த கும்பல் அரிவாளால் கவுன்சி லர் சித்ரா, அவரது கணவர் ரவிக்குமார் ஆகியோரை சரமாரியாக வெட்டியது. அதை தடுப்பதற்காக மகன் மோகன் ஓடி வந்தார். உடனே அவரையும் அந்த கும்பல் அாிவாளால் வெட்டியது. இதில் 3 பேருக்கும் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் வலியால் துடித்த அவர்கள் 3 பேரும் கூச்சல் போட்டனர். அதை கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அவர்களை பார்த்த தும் முகமூடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
விசாரணை
இதையடுத்து காயம் அடைந்து உயிருக்கு போராடிய கவுன்சிலர் சித்ரா, ரவிக்குமார், மோகன் ஆகிய 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் விசார ணை நடத்தினர்.
கமிஷன் தராததால் தகராறு
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கவுன்சிலர் சித்ரா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 3.5 சென்ட் நிலம் வாங்கி உள்ளார். அதை மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜா (23) என்பவர் புரோக்கராக செயல்பட்டு வாங்கிக் கொடுத்து உள்ளார்.
இதற்காக ராஜாவுக்கு 2 சதவீத கமிஷன் பேசப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த கமிஷன் தொகையை சித்ரா கொடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி சித்ரா குடும்பத்தி னரை சந்தித்து ராஜா தகராறு செய்துள்ளார்.
வலைவீச்சு
இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு ராஜா தனக்கு தெரிந்த 4 பேருடன் முகமூடி அணிந்து சென்று சித்ரா உள்பட 3 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. அதன்பிறகு ராஜா உள்ளிட்ட 5 பேரும் தப்பிச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை அருகே தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவரின் வீட்டிற்குள் முகமூடி கும்பல் புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.