தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

உசிலம்பட்டியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

Update: 2023-04-06 19:33 GMT

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி தி.மு.க. நகர் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த செயல்வீரர்கள் கூட்டம் நகர் அவைத் தலைவர் சின்னன் தலைமையில் நடைபெற்றது. நகரச் செயலாளர் எஸ்.ஓ.ஆர்.தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தார். மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். உறுப்பினர் சேர்க்கை முகாமில் அதிகப்படியான புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், பெண்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் எனவும் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசினர். கூட்டத்தில் நகர்மன்ற தலைவி சகுந்தலா, பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், சோலை ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் உசிலம்பட்டி பழனி, முருகன், அஜித்பாண்டி, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் முத்துராமன், சுதாகரன், சேடப்பட்டி ஜெயச்சந்திரன், நகர துணைச் செயலாளர்கள் உதயபாஸ்கரன், தேவி ரமேஷ் அழகர், பொருளாளர் ஜெயப்பிரகாஷ், முன்னாள் நகரச் செயலாளர் குபேந்திரன், தேசிங்கு ராஜா மணிமாறன், மாவட்ட பிரதிநிதிகள் தினேஷ் மகாலிங்கம், நகர்மன்ற உறுப்பினர்கள் வேட்டு ஜெயராமன், வீரமணி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்