தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்

வீரவநல்லூரில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது

Update: 2022-12-21 21:01 GMT

சேரன்மாதேவி:

தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வீரவநல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. வீரவநல்லூர் நகர செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சேரன்மாதேவி (கிழக்கு), முத்துப்பாண்டி என்ற பிரபு, (மேற்கு) முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைச் செயலாளர் முத்து ராமலிங்கம் வரவேற்று பேசினார். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர். இதில் நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், அம்பை ஒன்றிய செயலாளர் பரணி சேகர், வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, ஓய்வு பெற்ற தாசில்தார் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்முருகன், வீரவநல்லூர் நகர பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சீவலமுத்துகுமார், சுப்பு குட்டி, அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்