தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்
கடையநல்லூரில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
கடையநல்லூர்:
தமிழக முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் அப்பாஸ் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பெட்டி முருகையா, நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ராசையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான செல்லத்துரை சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகிற 8-ந் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்க திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு வருகை தருகிறார். பின்னர் அங்கிருந்து அன்று காலை 11 மணிக்கு கடையநல்லூர் வழியாக ராஜபாளையம் செல்கிறார். அவ்வாறு செல்லும் வழியில் கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.