உடுமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராகஎஸ்.கே.மெய்ஞானமூர்த்தி நியமனம்

Update: 2022-11-29 16:16 GMT


உடுமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளராக எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிர்வாகிகள் நியமனம்

தி.மு.க. 15-வது அமைப்பு தேர்தலில் திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் தலைமைக்கழகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலை தி.மு.க.பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அதன்படி உடுமலை கிழக்கு ஒன்றியஅவைத்தலைவராக எலையமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஈ.கே.மாரிமுத்து, ஒன்றிய செயலாளராக எஸ்.கே.எம்.தங்கராஜ் என்கிற எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி துணைச்செயலாளர்களாக சாமிநாதன், கார்மேகம், மலர்விழி, பொருளாளராக சுப்ரமணியம், மாவட்ட பிரதிநிதிகளாக மணியரசு, ராமகிருஷ்ணன், செந்தில்வேல் ஆகிய 9 பேர் கொண்ட ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பான வரவேஉடுமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராகற்பு

உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள எஸ்.கே.எம்.தங்கராஜ் என்கிற எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கு உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சின்னவீரம்பட்டியில் உடுமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அங்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி தி.மு.க.கொடியை ஏற்றி வைத்து பேசினார். அங்கு அவருக்கு சின்னவீரம்பட்டி, குறிஞ்சேரி, பெரியகோட்டை, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், கல்லாபுரம், எலையமுத்தூர், குருவப்பநாயக்கனூர், ஆண்டியகவுண்டனூர், தும்பலப்பட்டி, ஆலாம்பாளையம் ஊராட்சி பகுதிகளைச்சேர்ந்த தி.மு.க.கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி மன்றங்களைச்சேர்ந்த தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்